- Advertisement -
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவியது. இந்நிலையில், இந்த சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதையின் உயரம் ஏற்கெனவே 3 முறை குறைக்கப்பட்ட நிலையில், தற்போது 153×163 கி.மீ-ஆக நிலவின் சுற்று வட்டப்பாதையின் உயரம் வெற்றிகரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ சற்றுமுன் அறிவித்துள்ளது.
இதனால், சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து லேண்டர் நாளை (ஆக .17) பிரிக்கப்படுகிறது என்றும், வருகின்ற ஆகஸ்ட் 23ம் தேதியன்று லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -