- Advertisement -
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாகக் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து வரும் சம்பவம் நடந்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் இந்த நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இதைத் தாங்கமுடியாத அம்மாணவனின் தந்தையும் தற்கொலை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், தமிழக ஆளுநரையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 20ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என சற்றுமுன் அறிவித்துள்ளனர்.
- Advertisement -