- Advertisement -
தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில், வருகின்ற ஆகஸ்ட் 21ம் தேதி வரை மிதமான மழை பெய்யும். அதைப்போல், தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில், மணிக்கு, 55 கிமீ, வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -