- Advertisement -
கடந்த 2018ஆம் ஆண்டின் போது சென்னை – தூத்துக்குடி விமானத்தில், அப்போதைய பாஜக மாநில தலைவர் தமிழிசை முன்பாக ‘பாசிச பாஜக ஒழிக’ என முழக்கமிட்ட இளம்பெண் சோஃபியா மீது பாஜகவினரால் பதியப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து தற்போது நடைபெற்ற விசாரணையில் நீதிபதி தனபால் அவர்கள், அந்த பெண் மீது இந்த வழக்கில் பதியப்பட்ட சட்டப்பிரிவு பொருத்தமானது அல்ல எனக் கூறி இவ்வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்தது
- Advertisement -