- Advertisement -
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதிமுக முன்னாள் கௌன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த பிரபு என்பவர், நேற்று இரவு அவரது அண்ணன் வீட்டின் அருகே உள்ள கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பிரபுவைச் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்நிலையில், இந்த வெட்டி கொலை செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- Advertisement -