- Advertisement -
ஓமன் நாட்டிலிருந்து சென்னை வந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, மதுபோதையில் சக பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட சுரேந்தர் (34) என்ற பயணியை, சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும், இவர் போதையில் சக பயணிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, தாக்கவும் முயன்று, நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்துக்குள் எழுந்து நின்று ரகளையில் ஈடுபட்டதாகப் புகார் அளிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸார் தகவல் அளித்தனர்.
- Advertisement -