- Advertisement -
தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது முதல்வர் விருது வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு சிறந்த மாநகராட்சிகளில் திருச்சி முதலிடத்தையும், தாம்பரம் 2ம் இடத்தையும் பிடித்தது.
மேலும், நாளை (ஆக.15) சென்னையில் நடைபெற உள்ள 77வது சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
- Advertisement -