- Advertisement -
இந்தியாவில் நாள்தோறும் அதிகளவு வாகனங்கள் சாலையில் செல்கிறது. அப்போது ஏற்படும் போக்குவரத்து மற்றும் சிக்னலில் இருக்கும் போது ஏற்படும் நெரிசலில் பலர் தங்களது வாகனத்தில் உள்ள ஹாரனை அழுத்துவதால் அதிகளவு ஒலி மாசு ஏற்படுகிறது .
இந்நிலையில், இந்த ஒலி மாசுவை குறைக்க ஒன்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் ஐடியா ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், அவர் “ இனி வாகனங்களில் உள்ள ஹாரன் மற்றும் சைரன் சத்தங்களைப் புல்லாங்குழல், தபேலா உள்ளிட்ட இசைக் கருவிகளின் இனிமையான ஒலியாக மாற்ற விரும்புகிறேன்.இது ஒலி மாசுவில் இருந்து பொதுமக்களுக்கு நிம்மதி அளிக்கும்” எனக் கூறினார்
- Advertisement -