- Advertisement -
பொதுவாக இந்த மைதா என்பது சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு ஆகும். அப்படி, இந்த மைதாவில் உள்ள நார்ச்சத்து மிகக் குறைவாக இருப்பதால் உடலின் செரிமானம் கடினமாகிறது. மேலும், இதில் உள்ள கலோரி எடை அதிகரிப்புக்குப் பங்களிக்கிறது. இதேபோல், இது உடல் வீக்கத்திற்குப் பங்களிக்கும்.
இதனால், ஒரு மாதத்திற்கு நீங்கள் மைதாவைத் தவிர்த்து வந்தால் உடலின் செரிமானம் மேம்படும். அதைப்போல், உடல் எடையைப் பராமரிக்க முடியும். மேலும், நாம் மைதாவுக்குப் பதிலாகக் கோதுமை, தினை போன்ற சத்து நிறைந்த மாவைப் பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -