- Advertisement -
திருமணத்தின் போது குங்குமம் மணமக்கள் பாதங்களில் பூசும் பழக்கம் உண்டு. அப்படி குங்குமத்தைப் பெண்கள் காலில் பூசுவது மகாலெட்சுமி வீட்டிற்கு வருவதற்கான அறிகுறியாகும். ஆகவே , பெண்கள் காலில் குங்குமம் பூசினால் அவர்களையோ, அவர்களின் குடும்பத்தையோ செவ்வாய் தோஷம் பாதிக்காது. பெண்கள் காலில் குங்குமத்தைப் பூசிக் கொள்ளும் வீட்டில் பணத்துக்குப் பஞ்சம் இருக்காது. வீட்டில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும், குடும்பத்தில் அமைதி நிலைத்திருக்கும்.
மேலும், காலில் குங்குமம் கரைத்துப் பூசிக்கொள்ளும் பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுகிறார்கள். அசுபங்கள் வீட்டிற்குள் வராது, வீட்டு ஆண்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வார்கள். மற்றும் அவர்களுக்கு எந்த நெருக்கடியும் ஏற்படுவதில்லை என்பது ஐதிகம். திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் தங்கள் காலில் குங்குமம் பூசிக் கொண்டால் சிவனை போன்ற வாழ்க்கைத் துணை கிடைக்கும் என்பது ஐதீகம், இவர்கள் செல்லும் வீட்டில் மிகுந்த அன்பைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்
- Advertisement -