- Advertisement -
திருப்பதி மலையில் கடந்த சில நாட்களாகச் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அந்த சிறுத்தைகளால் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் சிறுவர்கள் பலத்த தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், தனது குடும்பத்துடன் பாதயாத்திரை மேற்கொண்ட சிறுமியை எதிர்பாராத விதமாக வந்த சிறுத்தை பலமாகத் தாக்கியுள்ளது. இதனால், அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.
இதன் காரணமாக, தற்போது திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பாதயாத்திரையாக மலையேறிச் செல்ல அனுமதி இல்லை எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், இந்த மலைப்பாதைகளில் இருசக்கர வாகனங்களில் காலை 6 மணி – மாலை 6 மணி வரை மட்டுமே பயணிக்க அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -