- Advertisement -
நிலவின் தெற்கு பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம், கடந்த 6ம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்தது. இந்நிலையில், இதன் முதல் சுற்றுப்பாதை குறைப்பு நடவடிக்கை கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி மேற்கொண்டது.
இதையடுத்து, ஆகஸ்ட் 9ம் தேதி 2வது தடவையாக நிலவின் சுற்றுப்பாதையின் குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டது. இந்நிலையில், தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் நீள்வட்ட சுற்றுப்பாதையின் உயரம் 3வது முறையாக இன்று (ஆக.14) குறைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- Advertisement -