- Advertisement -
சென்னையில் மாடு முட்டி படுகாயம் அடைந்த சிறுமியின் சிசிடிவி காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாமக அன்புமணி ராமதாஸ் அவர்கள் “சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயமடைந்தது வேதனையளிக்கிறது. சாலை விபத்துகளுக்கும் கால்நடைகள் காரணமாக உள்ளன. கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலும் கால்நடைகள் திடீரென சாலைகளுக்குள் நுழைவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன” என்றார்.
மேலும், அவர் ” இப்படி மாடுகளால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன, இவை தடுக்கப்பட வேண்டும். பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்
- Advertisement -