- Advertisement -
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகப் பருவமழை காரணமாகத் தக்காளியின் வரத்து குறைந்து அதன் விலை உச்சத்திலிருந்தது. அப்போது தமிழ்நாட்டிலும் தக்காளி அதிக விலைக்கு விற்பனையானது. அதில், அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.200 வரைக்கும் விற்பனையான நிலையில், சென்னை கோயம்பேட்டில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஆக.9) தக்காளி விலையில் நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமில்லாமல் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Advertisement -