- Advertisement -
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தின விடுமுறையையொட்டி, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சுமார் 1,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையிலிருந்து வரும் 11ம் தேதியில் 500 சிறப்புப் பேருந்துகளும், 12ம் தேதியில் 200 சிறப்புப் பேருந்துகளும், இயக்கப்பட உள்ளன. அதேபோல், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களுக்கு இடையே, சுமார் 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -