- Advertisement -
கேரளாவில் அமைந்திருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (ஆக.9) மாலை 5 மணிக்குத் திறக்கப்பட உள்ளது. ஏனென்றால், நாளை ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை நடைபெறவுள்ள நிலையில், அதற்காகச் சபரி மலைக் கோயிலின் நடை திறக்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, வருகின்ற ஆவணி மாத பூஜைகளுக்காக ஆகஸ்ட் 16ஆம் தேதியும், திருவோண பூஜைகளுக்காக வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதியும் சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. இதற்கான பல பக்தர்கள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து தரிசனம் செய்யவுள்ளதாக சற்றுமுன் தகவல் வந்துள்ளது
- Advertisement -