- Advertisement -
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் சமீபத்தில் நடத்திய ஆய்வு குறித்து பூவுலகின் நண்பர்கள் குழு ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ” நெய்வேலியில் உள்ள சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையங்களால் அப்பகுதியின் சுற்றுவட்டார நிலத்தடி நீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்துள்ளது” என அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
மேலும், அதில் ” நெய்வேலியில் நிலத்தடி தண்ணீரில் புளோரைடு, இரும்பு, மெக்னீசியம் உள்ளிட்ட பல தனிமங்கள் அதிகரித்துள்ளதால் இது மக்கள் குடிக்க உகந்தது இல்லை’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -