- Advertisement -
அண்மையில் சிறுவாபுரி கோயிலில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு அவர்கள் அங்குள்ள ஒரு அர்ச்சகருக்குக் கைகொடுக்கும் போது அவர் அதை நிராகரித்து ஆசீர்வாதம் பண்ணும் கண்ணொளியில் தீண்டாமை என்ற தலைப்பில் இணையத்தில் வெளியானது. இதையடுத்து, நடிகரும் தீண்டாமையை எதிர்கொண்டதாக அந்த அர்ச்சகருக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நடிகர் யோகி பாபு அவர்கள், “ கடந்த 12 ஆண்டுகளாக அந்த அர்ச்சகரை எனக்குத் தெரியும். அவர் ரொம்ப நல்ல மனிதர். அர்ச்சகரால் எந்த தீண்டாமையும் நடக்கவில்லை. அவர்கூட நான் கைக்குலுக்கப் போகவே இல்லை. டாலர் பத்திதான் விசாரித்தேன். வீடியோவை நல்லா பார்த்தாலே இது தெரியும்” என்றார்.
- Advertisement -