- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் , நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை (ஆக.10) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்குப் பயணம் புறப்பட்டுள்ளார். இவர் ஒவ்வொரு படம் ரிலீசுக்கு முன் இமயமலை பயணம் மேற்கொள்வது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளாக உடல்நிலை காரணமாக இமயமலை செல்லாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்த இமயமலை பயணத்திற்காக இல்லத்திலிருந்து புறப்படும்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ரொம்ப நாட்களுக்குப்பின் இமயமலை செல்கிறேன். ஜெயிலர் படம் எப்படி உள்ளது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்” எனப் பேட்டியளித்துள்ளார்.
- Advertisement -