- Advertisement -
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை தமன்னா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வரும் வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதியன்று வெளியாகிறது ‘போலா சங்கர்’ திரைப்படம். இந்நிலையில், இப்படத்திற்கான ப்ரொமோட் பணிகளை இப்படக்குழு செய்து வருகிறது. அதன்படி, இந்த போலா ஷங்கர்’ பட விழாவில் நடிகர் சிரஞ்சீவி இது அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக் ஆகும் என்றார்.
மேலும், அவர்” ‘வேதாளம்’ திரைப்படம் எந்த OTT தளத்திலும் இல்லை. அதைத் தெலுங்கு மக்கள் பெரியளவில் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை என்ற தைரியத்தில்தான், நாங்கள் ‘போலா ஷங்கர்” என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளோம். ரீமேக் படங்கள் ஏன் செய்கிறீர்கள்? எனச் சிலர் கேட்கின்றனர்; நல்ல கதையை, தெலுங்கு மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அதை ரீமேக் செய்வதில் என்ன தவறு உள்ளது?” என ஓபனாக பேசினார்.
- Advertisement -