- Advertisement -
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்மொழிந்து, இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்தைத் தொடங்கி வைத்தார், காங்கிரஸ் மக்களவை துணைத்தலைவர் கௌரவ் கோகோய். பின்னர் அவர், ” “மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் மௌனத்தைக் கலைக்க, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்ற நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்” என்றார்.
மேலும், அவர் ” இந்த தீர்மானத்தை I.N.D.I.A என்ற கூட்டணி கொண்டு வந்துள்ளது. இங்குக் கூட்டணியின் எண்ணிக்கை முக்கியமல்ல, மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைப்பதே முக்கியம்” எனப் பேசினார்
- Advertisement -