- Advertisement -
தமிழ்நாட்டில் தக்காளி விலை பருவமழை காரணமாகக் கடந்த மாதம் உச்சத்தைத் தொட்ட நிலையில், தற்போது தக்காளியின் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 1 கிலோ தக்காளி ரூ.100க்கும் அதிகமாக விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.50 அல்லது ரூ. 80க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம், பெங்களூரு சந்தை ஒன்றில் ஒரு தக்காளி ரூ.17க்கு விற்பனை செய்யப்பட்டதை அடுத்து இது தொடர்பான பில் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகின்றது.
- Advertisement -