- Advertisement -
மணிப்பூர் விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி பதிலளிக்க வலியுறுத்தி 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது நாடாளுமன்ற மக்களவையில் இன்று (ஆகஸ்ட் 8) விவாதம் தொடங்குகிறது.
இந்த விவாதத்தைக் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களால் கூறப்படுகிறது. அதன்படி, இன்றும், நாளையும் (ஆக. 9) இதுகுறித்த விவாதம் தொடர்ந்து நடைபெறும் என்றும், பின்னர் வருகின்ற ஆகஸ்ட் 10ல் இவ்விவாதங்களுக்குப் பிரதமர் மோடி பதிலளிப்பார். இதையடுத்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் முன்னிட்டு வாக்கெடுப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -