- Advertisement -
தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, சமீபத்தில் திருவள்ளூரில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கிருந்த அர்ச்சகர் ஒருவரிடம் நடிகர் யோகிபாபு கை கொடுக்க, ஆனால் அந்த அர்ச்சகர் கை கொடுக்க மறுத்து ஆசீர்வதிப்பது போல் கை காண்பிக்கிறார்.
இந்நிலையில், இந்த காணொளி தற்போது வைரலாக தீண்டாமை கொடுமை எனப் பலரும் கமெண்ட் செய்து, அர்ச்சகருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -