- Advertisement -
நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அவர்கள், ரூ. 15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் ஒன்றிய அரசு, மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ. 2000 கோடி கூட ஒதுக்க முடியவில்லை. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது” எனக் கடுமையாகப் பேசினார்.
மேலும், அவர் ” இலங்கை அரசியல் சட்டத்தில் 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவோம், வேலை வாய்ப்பு, உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை . சட்டமன்றம் நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு தவறிவிட்டது” என அடுக்கடுக்காக ஒன்றிய அரசின் மீது நம்பிக்கையில்லாத காரணத்தைக் கூறினார்.
- Advertisement -