- Advertisement -
நாடாளுமன்றத்தின் இன்றைய அவை நிகழ்வுகள் தொடங்கின. அப்போது, மக்களவை தொடங்கிய 2 நிமிடங்களுக்குள், எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால், பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர். மேலும், மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் 12 மணிக்குத் தொடங்கவுள்ளது எனத் தெரிவித்தனர்
இந்நிலையில், காலை நடந்து வரும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தைத் தொடங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அமளியில் ஈடுபடுவதால் தற்போது ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -