- Advertisement -
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குறைந்தது ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இதனால் நீர்ச்சத்து அதிகரிக்கும் பிரசவம் எளிதாக இருக்கும் நீர்ச்சத்து குறைந்தால் கருவில் இருக்க முடியாமல் குழந்தை விரைவில் வெளியே வந்துவிடும். இதைத்தான் குறைப்பிரசவம் என்கிறோம். இது போன்று தண்ணீர் சரிவரக் குடிக்காமல் விட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு கை, கால் ஊனம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. உடலில் உள்ள வெப்பத்தைச் சரியாக வைத்துக்கொள்ள அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மேலும், உங்கள் உடலின் வெப்பம் தொடர்ந்து இருந்தால் காய்ச்சல் வந்துவிடும். இது குழந்தைக்குப் பரவி, குழந்தையின் மூளையைப் பாதித்து முளைக் குறைபாட்டை ஏற்படுத்தும். அதைப்போல், உடல் வறட்சியானது மலச்சிக்கல் மற்றும் தாய்ப்பால் சுரப்பில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். சிறுநீரகத்தில் பிரச்சனையை உண்டாக்கும். தாய்க்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலையும் பாதிக்கும்.
- Advertisement -