- Advertisement -
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3ம் தேதியன்று 7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 6 அணிகளான இந்தியா, மலேசியா, கொரியா, ஜப்பான், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் கலந்து கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இப்போட்டி தொடங்கிக் கடந்த 4 நாட்களாக நடந்து வந்த நிலையில், புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடத்திலும், மலேசியா அணி இரண்டாவது இடத்திலும் இருப்பதால் இவ்விரு அணிகள் தற்போது அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அதேசமயம், நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவை 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதால் தற்போது 4வைத்து இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், இந்த தென்கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவும் வென்றது அரையிறுதிக்குத் தகுதி பெற்றதாகக் கூறுகின்றனர்.
- Advertisement -