- Advertisement -
நடிகர் ஃபகத் ஃபாசில் பிறந்தநாள் முன்னிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள், “உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்து தான் என் ‘ரத்தினவேல்’ கதாபாத்திரத்தை உருவாக்கினேன். ஒரு கண்ணில் பல தலைமுறைகளாகச் சொல்லிக்கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையைத் தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்” எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் ” இப்படி மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூடச் சொன்னேன். உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர். அம்பேத்கரின் குரலை ஓங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடித் தீரா பரவசத்தோடு சொல்கிறேன்” எனக் கூறி தனது வாழ்த்தைத் தெரிவித்தார்
- Advertisement -