- Advertisement -
டெல்லியில் புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 7) புற நோயாளிகள் பிரிவு பழைய கட்டடத்தின் 2வது மாடியில் உள்ள எண்டோஸ்கோப்பி அறையில் திடீரென பயங்கரமாகத் தீப்பிடித்தது. இந்த தளத்தின் கீழே அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளதால் அதிலிருந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
மேலும், இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்நிலையில், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Advertisement -