- Advertisement -
ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டு, அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டபோது, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி எனத் தனது பயோவை மாற்றிருந்தார். இந்நிலையில், தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் அவருக்கு எம்பி பதவி வழங்கப்பட்டு, தற்போது மக்கள் செயலகம் மீண்டும் எம்.பி ஆக ராகுல் காந்தியை அறிவித்து அறிக்கை வெளியிட்டது
இதனால், தற்போது ராகுல் காந்தி தனது பயோவை மாற்றி தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பழைய பயோவையே வைத்துள்ளார். இது இணையவாசிகள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
- Advertisement -