- Advertisement -
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கூட குக்கி இன மக்களைத் தாக்கிய வன்முறையாளர்கள் அந்த வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மற்றும் 2 குழந்தைகளை இரக்கமற்று சுட்டதால் அந்த 3 பேர் உயிரிழந்தனர். அதேசமயம், அரசின் ஆயுதங்களையும் இந்த வன்முறையாளர்கள் களவாடி வருவது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் , பாதுகாப்புப் படையினர் இந்த வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தி துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் அங்குத் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 800 வீரர்களைக் கொண்ட கூடுதல் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -