- Advertisement -
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்திய அணி விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியில், ஏற்கனவே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி சொற்ப ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.
இந்நிலையில், நேற்று (ஆக .7) இரவு 7 மணியளவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 152/7 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 18.5 ஓவர்களில் 155/8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் தற்போது 2-0 கணக்கில் முன்னிலையில் பெற்றுள்ளது.
- Advertisement -