- Advertisement -
நீங்கள் வேலை தேடிப் புறப்படும் முன்பு உங்கள் வீட்டுப் பூஜையறையில் ஒரு அகல் விளக்கை வைத்து அதில் பாதி அளவு சந்தனாதித் தைலத்தை (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) ஊற்றிக் கொள்ளுங்கள். மீதி பாதிக்கு நல்லெண்ணெய் ஊற்றிய பின் பஞ்சு திரி போட்டு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஏற்றிய தீபத்தின் முன்பாக அமர்ந்து நீங்கள் வேலை தேடிப் போகும் இடம் வேலை சம்பந்தமானவற்றை எல்லாம் உங்கள் மனதில் நினைத்து இந்த வேலை எனக்கு நிச்சயம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு விளக்கை நீங்களே குளிரச் செய்து விடுங்கள். இந்த சந்தனாதித் தைலம் நம் எண்ணத்தை நமக்கு ஈடேற்றும் அற்புத சக்தி வாய்ந்ததாகக் கூறப்படுகிறது
- Advertisement -