- Advertisement -
மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கு தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற்ற விசாரணையில் இந்த கலவரம் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள, ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் நீதிபதி ஷாலினி ஜோஷி மற்றும் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு விசாரணை, இழப்பீடுகள், மறுவாழ்வு உதவி உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த மணிப்பூர் வன்முறை வழக்குகளை விசாரிக்க 42 சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த டி.ஐ.ஜி. நிலை அதிகாரிகள் சிறப்பு விசாரணையைக் கண்காணிப்பார்கள் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது
- Advertisement -