- Advertisement -
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதியில் சந்திரயான் 3 நிலவின் தெற்கு பகுதியை ஆய்வு மேற்கொள்ள விண்ணில் ஏவப்பட்ட நிலையில், தற்போது இந்த சந்திரயான்-3 விண்கலம் நேற்று முன்தினம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்றது. இந்நிலையில், இந்த விண்கலம் செல்லும் நிலவின் சுற்றுப்பாதையின் உயரத்தைக் குறைக்கும் முதல்கட்ட பணி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதன்மூலம், இனி சந்திரயான்-3 விண்கலம் நிலவின் அருகே சென்றுள்ளது என்றும், இதன் சுற்றுவட்டப்பாதையின் உயரத்தைக் குறைக்கும் பணி வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி மதியம் 1 மணி முதல் 2 மணி அளவில் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -