- Advertisement -
சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் 7வது ஆசிய ஹாக்கி போட்டியில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு வருகின்றன. அவை இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான், சீனா, கொரியா ஆகியவை ஆகும். இந்நிலையில், இந்திய அணி கலந்துகொண்ட முதல் போட்டியில் சீனாவை வீழ்த்தி அபார பெற்றது. இதையடுத்து, ஜப்பானை எதிர்கொண்ட இந்திய அணி ட்ராவில் முடித்திருந்தது.
இந்நிலையில், நேற்று (ஆக. 6) நடைபெற்ற ஹாக்கி போட்டியில் மலேசியா அணியை எதிர்கொண்டது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் , மலேசியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அசத்தலாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி
- Advertisement -