- Advertisement -
தமிழ் திரையுலகில் வெளியான ‘அங்காடித் தெரு’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இந்த வெற்றிப் படத்தின் மூலம் நடித்த பிரபலமான நடிகை சிந்து இன்று (ஆக .7) காலை காலமானார்.
மேலும், கடந்த சில நாட்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் மருத்துவச் செலவுக்குப் பணமின்றி தவித்து வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மரணம் குறித்து நடிகர் கொட்டாச்சி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -