- Advertisement -
இந்தியாவின் எல்லை மாநிலமான ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மற்றும் 35 ஏ பிரிவை ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு இதே நாள் (ஆகஸ்ட் 5) ரத்து செய்தது. இதையடுத்து, இந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததற்கு எதிராக அங்குப் பல போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்த சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்டதன் 4ம் ஆண்டு என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்முவில் மக்கள் அதிகம் பயணிக்கும் அமர்நாத் யாத்திரை இன்று நிறுத்தப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
- Advertisement -