- Advertisement -
தமிழகத்தில் இனி போதையிலிருந்து விடுபடுபவர்களுக்கு நிச்சயம் அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை கண்ணகி நகர் மறுவாழ்வு மையத்தில், ‘நட்புடன் உங்களோடு போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு’ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். அதில், அவர் “ மக்களில் இனி யார் போதையிலிருந்து முழுமையாக விடுபடுகிறார்களோ அவர்களுக்கு இனி அரசுப் பணியில் கல்வித் தகுதிக்கு ஏற்ப தற்காலிக பணி வழங்கப்படும்” என உறுதியளித்தார்.
- Advertisement -