கோலமிடுவதால் இல்லங்களில் லெட்சுமி கடாட்சம் உண்டாகும், துர் சக்திகள் நம் வீட்டிற்குள் நுழையாது. அதிலும், குறிப்பாக அரிசி மாவினால் கோலம் போடுவது சில உயிர்களுக்கு உணவாக இருப்பதால் அன்னதானம் செய்த பலன் கிடைக்கும், சுவரையொட்டி போடப்படும் பார்டர் கோலங்கள் தீய சக்திகளைத் தடுக்கும் வல்லமை கொண்டது, கோலத்தின் எட்டு பக்கங்களிலும் பூக்கள் வைத்தால், திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் இதனால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
மேலும், கோலமிடுவதற்கு முன் வாசலை சாணமிடுவது கிருமி நாசினியாகச் செயல்படும், மார்கழி மாதங்களில் அதிகாலையில் எழுந்து கோலமிட்டு, இறைவனைத் தொழுவது உடலுக்கு ஆரோக்கியத்தையும் உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. கோலமிடுவது நம் வழிபாட்டு முறைகளில் ஒன்று. நாள்தோறும் கோலமிட்டால் நம் இல்லத்தில் செல்வம் பெருகும், நாம் சிறப்போடு வாழலாம்.
- Advertisement -