- Advertisement -
இந்த 2022-23ம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்துக்குச் செலுத்திய வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கு இன்று (ஜூலை 31) வரை ஒன்றிய அரசு அவகாசம் வழங்கியிருந்தது. மேலும், இந்த வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும் நினைவூட்டல்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று (ஜூலை 30) மாலை 6.30 மணி நிலவரப்படி 6 கோடிக்கும் அதிகமானோர் வரிக்கணக்கைத் தாக்கல் செய்துள்ளனர். தற்போது இந்த வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் எனவும், மேலும் இந்த கடைசி நேரக் குழப்பத்தைத் தவிர்க்க வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளனர்
- Advertisement -