- Advertisement -
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோயிலில் ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமி நாளன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்த கிரிவலத்தைக் கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள, சிவபெருமானின் வடிவமாகக் கருதப்படும் மலையைச் சுற்றி பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். மேலும், இந்த கோயிலில் வரும் சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீப விழாக்கள் மிக விசேஷமாகக் கொண்டாடப்படும்.
அதன்படி, இந்தாண்டு வரும் ஆடி மாத பௌர்ணமியை ஒட்டி நாளை (ஆகஸ்ட் 1) கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காகச் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
- Advertisement -