- Advertisement -
பாகிஸ்தானில் உள்ள பஜுர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல் (J.U.I.F )கட்சி மாநாட்டில் நேற்று (ஜூலை 30) நடந்த குண்டு வெடிப்பில் சுமார் 50 பேர் பலியாகினர். மேலும், இந்த குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு மனித வெடி குண்டால் நிகழ்ந்தது எனக் கூறப்படுகிறது.
தற்போது இச்சம்பவத்திற்கு இக்கட்சியின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் “தானும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்ததாகவும், ஆனால் சில தனிப்பட்ட பொறுப்புகள் காரணமாகக் கலந்து கொள்ள முடியவில்லை” என்றார். அதேசமயம், இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்குக் காரணமானவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் எனப் பிரதமர் ஷபாஸ் ஷரீஃப் உறுதி உள்ளது குறிப்பிடத்தக்கது
- Advertisement -