- Advertisement -
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பஜார் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 30) இஸ்லாமிய அரசியல் கட்சியான ஜேயுஐஎப் அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அப்படி நடைபெற்ற அந்த கூட்டத்தில் திடீரென எதிர்பாராதவிதமாகக் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வந்த நிலையில், தற்போது இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.மேலும், இங்கு 200க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது மனித வெடிகுண்டு மூலம் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
- Advertisement -