- Advertisement -
இயக்குநர் அட்லீ இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்க விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உட்படப் பலர் நடித்துள்ளனர். மேலும், இதில் நடிகை தீபிகா படுகோன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்திற்கான போஸ்டர் இணையத்தில் வெளியானது. அதன்மூலம், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் எகிறியது. ஆனால், தற்போது இந்த ஜவான் படத்திலிருந்து ‘வந்த எடம்…’ என்ற பாடல் இன்று (ஜூலை 31) இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்பாடல் இசையமைப்பாளர் அனிருத் இசை மற்றும் குரலில், பாடலாசிரியர் விவேக் வரிகளில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது.
வரும்போதே தெரியனும் .. வர்ர சிங்கம் யாரு-ன்னு ஜவான கொண்டாட ஜவானோட கொண்டாட Ready-ஆ#VandhaEdam song out now!https://t.co/EKWuSjEqCG#Jawan releasing worldwide on 7th September 2023, in Hindi, Tamil & Telugu pic.twitter.com/RQXr662e3m
— atlee (@Atlee_dir) July 31, 2023
- Advertisement -