- Advertisement -
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி இந்திய அரசால் அங்கீகரிக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வீரவநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.
இதன்மூலம், இந்திய நாட்டிலேயே 58 புவிசார் குறியீடு பொருளுடன் இந்தியாவில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இதுவரை 17 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -