- Advertisement -
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (31.7.2023) தலைமைச் செயலகத்தில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு (Young Liu) அவர்கள் சந்தித்து தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய முதலீடுகள் குறித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன் இருந்தார்
மேலும், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயலாளர்கள், அரசு அலுவலர்கள் இருந்தனர். இந்த சந்திப்பில் பல முக்கிய முடிவுகளை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
- Advertisement -