- Advertisement -
நாட்டில் பல வட மாநிலங்களிலும் , தென் மாநிலங்களிலான தெலுங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இந்த தென்மேற்கு பருவமழை காரணமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது . அதேசமயம், தமிழகத்தில் நேற்று(ஜூலை 30) 8 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 107 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரை மாநகரில் 105 டிகிரி, திருச்சி, நாகப்பட்டினத்தில் தலா 102 டிகிரி, புதுச்சேரி, கரூர் பரமத்தியில் தலா 101 டிகிரி, காரைக்காலில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -