- Advertisement -
அண்ணாமலையார் கோயிலுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை மீட்கக் கோரி மணிகண்டன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கு குறித்த விசாரணையில் நீதிபதிகள், ”திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி இந்து சமய அறநிலையத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டு உள்ளது.
இதற்குத் தமிழ்நாடு அரசு தரப்பில், இப்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பதிலளித்துள்ளனர்.
- Advertisement -